புதுச்சேரி: மாணவர்களுக்கு அட்சயபாத்திரா சேவை அமைப்பு மூலம் மதிய உணவுத் திட்டம் தொடக்கம்

புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் அட்சயபாத்திரம் திட்டம் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
அரசு பங்களிப்புடன் அட்சயபாத்திரா சேவை நிறுவனத்தின்  இந்த மதிய உணவு வழங்கும் திட்டத்தை  துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.
அரசு பங்களிப்புடன் அட்சயபாத்திரா சேவை நிறுவனத்தின் இந்த மதிய உணவு வழங்கும் திட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் அட்சயபாத்திரம் திட்டம் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. புதுச்சேரி லாஸ்பேட்டையில் அட்சயபாத்திரா அமைப்பின் சார்பில் மத்திய சமையல் கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அரசு பங்களிப்புடன் அக்ஷய பாத்திர சேவை நிறுவனத்தின்  இந்த மதிய உணவு வழங்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். 

குழந்தைகளுக்கு அவர்கள் மதிய உணவு வழங்கினர். சட்டப்பேரவைத் தலைவர் ஆர் செல்வம், கல்வியமைச்சர் ஏ. நமச்சிவாயம், எம்எல்ஏ கே எஸ் பி ரமேஷ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், அட்சயபாத்திரா சேவை நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி மாநிலத்தில் தி நியூ இந்திய ஆசுரன்ஸ் நிறுவனம், ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் ஆதரவுடன், அதிநவீன மையப்படுத்த சமையல் அறை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அரசு சார்பில் மதிய உணவு திட்டம் 50 ஆயிரத்து 800 மாணவர்களுக்கு இன்று முதல் வழங்கப்பட உள்ளது.

சாம்பார் சாதம், இனிப்பு பொங்கல், வெஜ் பிரியாணி, பொங்கல், கடலை குருமா, தயிர் சாதம், ஊறுகாய் ஆகிய மதிய உணவு வழங்கப்படுகிறது.

தினசரி மதிய உணவுக் கூடத்தில் தயாரிக்கப்படும் உணவு சரியான நேரத்தில் புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு, அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com