இரவோடு இரவாகக் கலையரங்க பெயர் அழிப்பு: எம்எல்ஏ போராட்டம் எதிரொலி

வாழப்பாடி ஆண்கள் பள்ளி கலையரங்கத்தின் முகப்பில், முத்தமிழறிஞர்  கலைஞர் கலையரங்கம் பெயர் என எழுதப்பட்டிருந்த வாசகம்  நேற்று இரவோடு இரவாக அழிக்கப்பட்டது.
எம்எல்ஏ போராட்டம் கு.சித்ரா எதிரொலியாக வாழப்பாடி ஆண்கள் பள்ளி கலையரங்கத்தின் முகப்பில், முத்தமிழறிஞர் கலைஞர் கலையரங்கம் என எழுதப்பட்டிருந்த வாசகம் நேற்று இரவோடு இரவாக அழிக்கப்பட்டது.
எம்எல்ஏ போராட்டம் கு.சித்ரா எதிரொலியாக வாழப்பாடி ஆண்கள் பள்ளி கலையரங்கத்தின் முகப்பில், முத்தமிழறிஞர் கலைஞர் கலையரங்கம் என எழுதப்பட்டிருந்த வாசகம் நேற்று இரவோடு இரவாக அழிக்கப்பட்டது.


வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடியில் ஏற்காடு தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கு.சித்ரா தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதன் எதிரொலியாக, வாழப்பாடி ஆண்கள் பள்ளி கலையரங்கத்தின் முகப்பில், முத்தமிழறிஞர்  கலைஞர் கலையரங்கம் பெயர் என எழுதப்பட்டிருந்த வாசகம்  நேற்று இரவோடு இரவாக அழிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏற்காடு தொகுதி  மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2017 இல் கலையரங்கம் அமைக்க, ரூ. 13.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத்திட்டப் பணிகள் இரண்டு ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், கடந்த செப்.29 இல் தமிழக முதல்வர் மு க.ஸ்டாலின், வருமுன் காப்போம் திட்ட தொடக்க விழாவிற்கு வாழப்பாடி வருகை தந்த போது, கட்டுமான பணிகள் நிறைவு செய்யப்பட்டது. 

இதனையடுத்து, இந்த கலையரங்கத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் கலையரங்கம் என பெயர் சூட்டப்பட்டு, திறப்பு விழா செய்து கல்வெட்டு, பெயர் பலகை வைக்கப்பட்டது.

வாழப்பாடி ஆண்கள் பள்ளி கலையரங்கத்தின் முகப்பில், முத்தமிழறிஞர் கலைஞர் கலையரங்கம் பெயர் என எழுதப்பட்டிருந்த வாசகத்தை அகற்றக்கோரி தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட ஏற்காடு தொகுதி அதிமுக எம்எல்ஏ கு.சித்ரா மற்றும் கட்சியினர். 

இந்த கல்வெட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் பொன்.கௌதமசிகாமணி, ஏற்காடு சட்டப்பேரவை  உறுப்பினர் கு.சித்ரா, பனமரத்துப்பட்டி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சிவலிங்கம் மற்றும் அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.  
இந்நிலையில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது ஒதுக்கிய நிதியை பயன்படுத்தி கட்டப்பட்ட கலையரங்கத்திற்கு கலைஞர் கலையரங்கம் என பெயர் சூட்டப்பட்டதை. கண்டித்தும், ஏற்கனவே பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் 2020 தீர்மானம் நிறைவேற்றியபடி புரட்சித்தலைவி அம்மா கலையரங்கம் என பெயர் சூட்ட வலியுறுத்தியும், ஏற்காடு தொகுதி அதிமுக எம்எல்ஏ கு.சித்ரா செவ்வாய்க்கிழமை தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார். 

வாழப்பாடி ஒன்றிய அதிமுக செயலாளர் சதீஷ்குமார், நகர செயலாளர் சிவக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் எம்ஜிஆர் பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மாவட்ட உயர் அதிகாரியிடம் கலந்தாலோசித்த பிறகு, முறையாக அனுமதி பெற்று பெயர் பலகை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டார்.

இந்நிலையில், ஆண்கள் பள்ளி கலையரங்கத்தின் முகப்பில், முத்தமிழறிஞர்  கலைஞர் கலையரங்கம் பெயர் என எழுதப்பட்டிருந்த வாசகம்  நேற்று இரவோடு இரவாக அழிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com