நீட் தேர்வுக்கு விலக்கு மசோதா: அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

நீட் தேர்வுக்கு விலக்கு மசோதா பற்றி கடிதம் கொடுக்க மத்திய அமைச்சர் அமித்ஷா நேரம் கொடுக்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 
நீட் தேர்வுக்கு விலக்கு மசோதா:  அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

நீட் தேர்வுக்கு விலக்கு மசோதா பற்றி கடிதம் கொடுக்க மத்திய அமைச்சர் அமித்ஷா நேரம் கொடுக்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் 110ன் கீழ் பேசினார். 

அப்போது, நீட் தேர்வுக்கு விலக்கு மசோதா பற்றி கடிதம் கொடுக்க அனைத்து கட்சி எம்.பி.க்களை சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் கொடுக்கவில்லை. இது மக்களாட்சி தத்துவத்துக்கு எதிரானது. நீட் தேர்வு விலக்கு மசோதா ஆளுநரால் இன்னும் குடியரசுத் தலைவருக்கும் அனுப்பப்படவில்லை. 

நீட் தேர்வு என்பது கூட்டாச்சி தத்துவத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. 

நுழைவுத் தேர்வு என்பது ஏழை மாணவர்களை பாதிக்கும். எந்தவொரு நுழைவுத்தேர்வு என்றாலும் அது ஏழை, எளிய மாணவர்களையே பாதிக்கும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையை நடத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. 

நீட் தேர்வுக்கு விலக்கு தொடர்பாக நாளை மறுநாள்(ஜன.8) ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும். அனைத்து கட்சியினரும் பங்குபெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com