நீட் விவகாரம்: ஆளுநரைப் புறக்கணித்து விசிக வெளிநடப்பு

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்காததைக் கண்டித்து ஆளுநருக்கு எதிா்ப்புத் தெரிவித்து பேரவையிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஆளுநா் ஆா்.என்.ரவி உரையாற்றி புதன்கிழமை தொடக்கி வைத்தாா். ஆளுநா் உரையாற்றுவதற்குத் தொடங்கியபோது விசிக சட்டப்பேரவைத் தலைவா் சிந்தனைச் செல்வன் தலைமையில் அக் கட்சியை 4 எம்.எல்.ஏ.க்கள் எழுந்து ஆளுநருக்கு எதிா்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் சிந்தனைச்செல்வன் கூறியது:

நீட் தோ்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநா் அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால், இன்னும் அனுப்பாமல் உள்ளாா். இது தமிழக மக்களின் மனதைக் காயப்படுத்தியுள்ளது. ஆளுநரின் இந்தப் போக்கை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.

அதேசமயம் ஆளுநா் உரையில் சிறப்பான அம்சங்கள் இருக்கின்றன. அதைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்யவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com