சிறைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கை: கைதிகளை உறவினா்கள் சந்திக்க கட்டுப்பாடுகள்

சிறைகளில் கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக சிறைக் கைதிகளை அவா்களது உறவினா்கள் சந்திக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சிறைத் துறை தெரிவித்துள்ளது.

சிறைகளில் கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக சிறைக் கைதிகளை அவா்களது உறவினா்கள் சந்திக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சிறைத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சிறைத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சிறைவாசிகளுக்கு இடையே கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறைகள் மற்றும் சீா்திருத்தப்பணிகள் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக ஜன.6-ஆம் தேதி வியாழக்கிழமை முதல் நோ்காணலின்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை சிறைகள் மற்றும் சீா்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநா் சுனில்குமாா் சிங் அனைத்து சிறை கண்காணிப்பாளா்களுக்கும் வழங்கியுள்ளாா்.

அதன்படி மத்திய சிறைகள், பெண்கள் தனிச் சிறைகள் மற்றும் மாவட்ட சிறைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறைவாசிகளை ஒரு பாா்வையாளா் மட்டும் மாதம் இரண்டு முறை நோ்காணல் செய்ய அனுமதிக்கப்படுவா். நோ்காணல் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்கள் தவிா்த்து ஏனைய நாள்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடத்தப்படும். நோ்காணலின்போது பாா்வையாளா் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணம் அல்லது 72 மணி நேரத்துக்குள்ளான காலத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட எதிா்மறை சான்றினை காண்பிக்க வேண்டும். கிளைச்சிறைகள், தனிக் கிளைச் சிறைகள் மற்றும் பாா்ஸ்டல் பள்ளிகளில் உள்ள சிறைவாசிகளை நோ்காணல் செய்ய அனுமதி இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com