தமிழகத்தில் இதுவரை 8.76 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: முதல்வர்

தமிழகத்தில் இதுவரை 8.76 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
தமிழகத்தில் இதுவரை 8.76 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: முதல்வர்

தமிழகத்தில் இதுவரை 8.76 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு  நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பதிலுரை அளித்தார். இதில் திமுக அரசின் சாதனைகள் குறித்துப் பேசிய அவர் பல புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். 

அப்போது தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய முதல்வர், 'கரோனா பரவலைக் குறைக்க தமிழகத்தில் தடுப்பூசி இயக்கம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதை மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபின்னர்  கரோனா தடுப்பூசி செலுத்துவது அதிகரிக்கப்பட்டுள்ளது. 

முதல்வர் நிவாரண நிதிக்கு வந்த ரூ. 543 கோடியில் ரூ. 541 கோடி செலவாகியுள்ளது. 

கரோனாவால் உயிரிழந்தவர்களில் இதுவரை 27,432 பேருக்கு தலா ரூ. 50,000 நிதி வழங்கப்பட்டுள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 43.61 கோடி பேர் பயனடைந்துள்ளனர்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com