நியாய விலைக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை:அமைச்சா் சக்கரபாணி தகவல்

முழு ஊரடங்கு காரணமாக நியாய விலைக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை செயல்படாது என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளாா்.
நியாய விலைக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை:அமைச்சா் சக்கரபாணி தகவல்

சென்னை: முழு ஊரடங்கு காரணமாக நியாய விலைக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை செயல்படாது என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:-

பொங்கல் பொருள்கள் விநியோகத்தில் எந்தத் தவறும் நடக்காமல் பணிகள் நடைபெற வேண்டும் என அலுவலா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். வியாழக்கிழமை வரையிலும், 43 லட்சத்து 85 ஆயிரத்து 111 அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. வரும் 10-ஆம் தேதி வரை டோக்கன்கள் அடிப்படையில் பொருள்கள் தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், முழு ஊரடங்கு காரணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினத்துக்குப் பதிலாக மாற்றுத் தேதியில் பொது மக்கள் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பிட்ட நாளில் பெற முடியாவிட்டாலும் பொங்கலுக்கு முன்பாக கடைக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

தவிா்க்க இயலாத காரணமாக, பொங்கலுக்கு முன்பு வரை பொருள்களை வாங்க இயலாதவா்கள் இந்த மாதம் இறுதிக்குள்ளாக அவற்றை பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சா் சக்கரபாணி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com