தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தார்.

2022ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டமானது ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் ஜனவரி 5ஆம் தேதி காலை துவங்கியது.

கரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் கூட்டத்தொடரை இரண்டு நாள்களில் முடித்துக் கொள்ள அலுவல் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதை அடுத்து ஜன.6 மற்றும் 7ஆம் தேதி கூட்டம் நடைபெற்றது.

ஜனவரி 6ஆம் தேதி நடைபெற்ற கேள்வி நேரத்தை தமிழக வரலாற்றில் முதல்முறையாக நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இதற்கு அனைத்து கட்சித் தரப்பிலிருந்தும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க நேரலையின் முதல் கேள்வியை பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் கருணாநிதி கேட்க முதல்வர் மு.க.ஸ்டாலிம் பதிலளித்து துவக்கி வைத்தார்.

இரண்டாம் நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் பதிலுரை வழங்கினார். இந்த நிகழ்வும் நேரலை ஒளிப்பரப்பானது.

இந்தக் கூட்டத்தொடரில், டிஎன்பிஎஸ்சி சட்டத் திருத்த மசோதா, கூட்டுறவு சங்க சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சட்டப்பேரவையின் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com