திருத்துறைப்பூண்டியில் நெல் சேமிப்புக் கிடங்கு: காணொலியில் முதல்வர் திறந்துவைத்தார்

திருத்துறைப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் வேளாண் விற்பனை வாரியத்தின் மூலம் 5,000 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு திறக்கப்பட்டுள்ளது. 
திருத்துறைப்பூண்டியில் நெல் சேமிப்புக் கிடங்கு: காணொலியில் முதல்வர் திறந்துவைத்தார்

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் வேளாண் விற்பனை வாரியத்தின் மூலம் 5,000 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட மெகா கிடங்கினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக்  காட்சி வழியாக திறந்து வைத்தார்.

சம்பா, அறுவடையை கருத்தில் கொண்டு சுமார் 6.90  கோடி மதிப்பீட்டில் மூன்று மாதங்களில் கட்டி  முடிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து குத்துவிளக்கு ஏற்றிவைத்து பணிகளை தொடங்கிவைத்தார்.

இதில் முன்னாள் நகர்மன்றத் தலைவர்ஆர்.எஸ். பாண்டியன், ஒன்றியக் குழுத் தலைவர் அ.பாஸ்கர், திமுக ஒன்றியச் செயலாளர் பிரகாஷ், அரசு வழக்கறிஞர் பாஸ்கர், வேளாண் விற்பனை வணிக உதவி பொறியாளர் முருகேசன், ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் சங்கீதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

திருத்துறைப்பூண்டி பகுதி அதிகமாக நெல் சாகுபடி கொண்ட பகுதியாக இருப்பதாலும், அறுவடை நேரத்தில் நெல்லுக்கு  உரிய விலை கிடைக்காததாலும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். தமிழகத்தில் புதிய அரசு அமைந்தவுடன் விவசாயிகள் நெல்லுக்கு உரிய அதிக விலை கிடைக்கும் வரை நெல்மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனைக் கூட குடோன்களில் வாடகைக்கு பாதுகாப்பாக வைத்து  நெல் விலையேற்ற நேரங்களில் நெல்லை மீண்டும் எடுத்து விற்பனை செய்வதற்கு வசதியாக உரிய நேரத்தில் நிதி 5,000 மெட்ரிக் டன்  குடோன் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து மூன்றே மாதங்களில்  இந்த கிடங்கு கட்டப்பட்டுள்ளது.

நெல் அறுவடை துவங்கிய சரியான நேரத்தில் இந்த கிடங்கினை திறந்துவைத்தற்கு தமிழக முதல்வருக்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com