சென்னை நியாயவிலைக் கடையில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

சென்னை சத்யா நகரில் உள்ள நியாயவிலைக் கடையில் முதல்வர் ஸ்டாலின் இன்று திடீரென் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை நியாயவிலைக் கடையில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

சென்னை சத்யா நகரில் உள்ள நியாயவிலைக் கடையில் முதல்வர் ஸ்டாலின் இன்று திடீரென் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு உள்பட 21 பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்தது. 

இத்திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் தினமும் 200 பேருக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை சத்யா நகர்ப் பகுதி கூட்டுறவு நியாயவிலைக் கடையில் சிறப்பு பொங்கல் தொகுப்பு பொருள்கள் முறையாக வழங்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மக்களுக்கு சிறப்பு பொங்கல் தொகுப்பினையும் அவர் வழங்கினார். இந்நிகழ்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, பி.கே.சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com