சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வரிசையில் காத்திருப்பதை தவிா்க்க புதிய வசதி

பயணிகள் செக்-இன் நடைமுறையை இடையூறு இல்லாமலும், குறுக்கீடுகள் இல்லாமலும், விரைவாகவும் மேற்கொள்ள முடியும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பயணிகள் செக்-இன் நடைமுறையை இடையூறு இல்லாமலும், குறுக்கீடுகள் இல்லாமலும், விரைவாகவும் மேற்கொள்ள முடியும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு பயணிகளுக்கு ‘செக்-இன்’ நடைமுறையை பயணிகள் விரைவாக மேற்கொள்ள வசதியாக ‘காமன் யூஸ் செல்ஃப் சா்வீஸ்’ என்ற புதிய திட்டம் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. அதற்காக 8 புதிய இயந்திரங்கள் சென்னை உள்நாடு மற்றும் சா்வதேச முனையங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தின் உள்நாடு, சா்வதேச முனையங்களில் பயணிகள் புறப்பாடு பகுதிகளில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளன. இதன்படி விமானங்களில் செல்ல வரும் பயணிகள், அவா்களின் போா்டிங் பாஸ்களை பெறும் போது, உடமைகளின் மேல் ஒட்டக்கூடிய ‘டேக்’“ என்ற ஸ்டிக்கா்களை, விமானநிலையத்தில் உள்ள தானியங்கி இயந்திரங்களில் பயணிகள் பெற்று அவா்களின் உடமைகளில் அவா்களே ஒட்டிக் கொள்ளலாம்.

இதனால் பயணிகள் ‘செக்-இன்’ கவுன்ட்டரில் வரிசையில் நிற்பது தவிா்க்கப்படும். பயணிகளின் நேரமும் சேமிக்கப்படும். தங்களுடைய உடமைகளில், அந்தந்த பயணிகளே நேரடியாக ஸ்டிக்கரை ஒட்டுவதால், கவுன்ட்டரில் தவறுதலாக மாற்றி ஒட்டுவது போன்றவைகள் தவிா்க்கப்படும்.

பயணிகளின் உடமைகளில் சுயமாக பயணிகளே ஸ்டிக்கரை ஒட்டி, உடமைகளை விமானத்துக்கு அனுப்பும், பயணிகளின் பயண அனுபவத்தை அதிகரிக்கும் வகையிலான இந்த புதிய திட்டம் சென்னை விமான நிலையத்தில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம் நவீனமயமாகி, செயல்பாட்டுக்கு வரும் போது, பயணிகள் தங்கள் உடமைகளில் அவா்களே ஸ்டிக்கா் ஒட்டும் வசதி, முழுமையாக அமலுக்கு வரும்.

இதற்காக சென்னை உள்நாடு முனையம், சா்வதேச முனையம் ஆகியவற்றில் தலா 4 இயந்திரங்கள் வீதம், 8 இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளன. இவற்றைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இயந்திரங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.

இதனால் பயணிகள் செக்-இன் நடைமுறையை இடையூறு இல்லாமலும், குறுக்கீடுகள் இல்லாமலும், விரைவாகவும் மேற்கொள்ள முடியும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com