தாராபுரத்தை அடுத்துள்ள மீனாட்சிபுரம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்காக விளைவிக்கப்பட்டுள்ள கரும்பு.
தாராபுரத்தை அடுத்துள்ள மீனாட்சிபுரம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்காக விளைவிக்கப்பட்டுள்ள கரும்பு.

பொங்கல் பண்டிகைக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும்: அமராவதி பாசன விவசாயிகள் கோரிக்கை

பொங்கல் பண்டிகையை ஒட்டி விவசாயிகள் விளைவித்துள்ள கரும்பை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் அமராவதி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்: பொங்கல் பண்டிகையை ஒட்டி விவசாயிகள் விளைவித்துள்ள கரும்பை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் அமராவதி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்துக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் பொங்கலிட்டு, கரும்பு, மஞ்சள், இஞ்சி உள்ளிட்டவைகளை வைத்து படையலிட்டு வழிபாடு நடத்துவது வழக்கம்.

இதற்காக தாராபுரம் அமராவதி ஆற்று பாசன  விவசாயிகள் 200 ஏக்கரில் கரும்பை விளைவித்து தற்போது அறுவடை செய்து விற்பனைக்கு தயார் நிலையில் வைத்துள்ளனர்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் காரணமாக கரும்பு விலை வீழ்ச்சியடைந்தது. இந்த நிலையில், நிகழாண்டு பொங்கல் பண்டிகைக்கு அதிக விலைக்கு கரும்பு விற்பனையாகும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.  

பொங்கல் பண்டிகைக்காக விளைவிக்கப்பட்டுள்ள கரும்பு.

இதுகுறித்து தாராபுரத்தை அடுத்துள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயி மயில்சாமி கூறியதாவது:

தமிழக அரசு, நியாய விலை கடைகள் மூலம், மக்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கிவருகிறது இதில் கரும்பும் இடம்பெறுகிறது. இதற்கான கரும்புகளை கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்களின் தலையீட்டால் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கரும்பு விளைவிக்க ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகிறது. ஆனால் இடைத்தரகர்கள் அரசு நிர்ணயித்துள்ள விலையைக் காட்டிலும் மிகவும் குறைவான விலைக்கே கொள்முதல் செய்வதால் நஷ்டம் ஏற்படுகிறது. அதாவது கரும்பு ஒன்றுக்கு அரசு ரூ.33 நிர்ணயித்துள்ள நிலையில் தற்போது இடைத்தரக்கள் ரூ.13க்கு கொள்முதல் செய்கின்றனர். அதே வேளையில், வெளிமார்க்கெட்டில் 2 கரும்புகள் கொண்ட ஒரு சல்லையின் விலை ரூ.100 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. 

ஆகவே, அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக தாராபுரம் பகுதியில் விவசாயிகள் விளைவித்துள்ள கரும்பை நியாயமான விலையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com