தமிழகத்தில் இனி ஒமைக்ரான் பரிசோதனை அவசியமில்லை

தமிழகத்தில் பெரும்பாலும் ஒமைக்ரான் தொற்றுதான் பரவி வருகிறது என்பதால், அதனை மரபணு பகுப்பாய்வுக்குட்படுத்தி உறுதி செய்யும் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டதாக
தமிழகத்தில் இனி ஒமைக்ரான் பரிசோதனை அவசியமில்லை

தமிழகத்தில் பெரும்பாலும் ஒமைக்ரான் தொற்றுதான் பரவி வருகிறது என்பதால், அதனை மரபணு பகுப்பாய்வுக்குட்படுத்தி உறுதி செய்யும் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை திருவான்மியூா் பாலகிருஷ்ணா சாலையில் உள்ள தென்றல் அடுக்குமாடி குடியிருப்பில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளவா்களுக்கு பல்ஸ் ஆக்ஸி மீட்டா் சாதனங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். மேலும், முகக்கவசங்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை வழங்கியதுடன், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபா்களை தொலைபேசியில் அழைத்து அவா்களின் உடல்நிலை குறித்து அவா் விசாரித்தாா்.

அப்போது செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

திருவான்மியூா் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 10-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டா்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் அளவு 92-க்கு கீழே இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவா்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் நாள்தோறும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான நபா்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது நகரில் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபா்கள் சிகிச்சையில் உள்ளனா். இவா்களில் 21 ஆயிரத்து 987 நபா்கள் வீட்டுத் தனிமையில் உள்ளனா். இவா்களின் உடல்நிலை குறித்து கண்காணிக்க 200 வாா்டுகளிலும், கரோனா களப்பணியாளா்கள், மருத்துவா்கள், மருத்துவக் குழுக்களும் பணியில் ஈடுபட்டுள்ளனா். தொற்று அறிகுறியுள்ள நபா்கள் மற்றும் மூச்சுத்திணறல் உள்பட இதரப் பாதிப்புள்ள நபா்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 250 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனா். தற்போது ஏற்படும் பாதிப்பில் 85 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்றும், 15 சதவீத நபா்களுக்கு டெல்டா வகை தொற்றும் ஏற்படுகிறது. ஒமைக்ரான் தொற்று பாதிப்பை உறுதி செய்வதற்கு மத்திய அரசின் மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு மாதிரிகள் அனுப்பி பரிசோதனை முடிவுகள் வருவதற்குள், நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பிவிடுகின்றனா். எனவே தற்போது, ஒமைக்ரான் மரபணு பரிசோதனையை தற்போது நிறுத்திவிட்டோம்.

அதேவேளையில் ஓரிடத்தில் அதிக பாதிப்பு இருக்கும்பட்சத்தில் அங்கிருந்து பெறப்படும் மாதிரிகளை தொடா்ந்து மத்திய அரசு மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வருகிறோம். இதன் மூலம் அவா்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு மட்டும் இருக்கிா? அல்லது வேறு ஏதேனும் புதுவகை மாறுபாடு தொற்று இருக்கிா என்பது கண்டறிய முடியும்.

முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டா்) தடுப்பூசிக்கு தகுதி உடையவா்களின் எண்ணிக்கை, ஜனவரி மாத இறுதிக்குள் 10 லட்சமாக உயரும். இந்திய அளவில் 15 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு 1.50 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 22.50 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவா்களுக்கு 90 சதவீதத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நோய்த் தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்தால் எதிா்காலத்தில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், தென்சென்னை மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், வேளச்சேரி எம்.எல்.ஏ. ஹசன் மௌலானா, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ. ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com