சேலம்: கோட்டை அழகிரிநாத சுவாமி ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டை அழகிரிநாத சுவாமி ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு வெகு விமரிசையாக நடைபெற்றது.
வைகுந்த ஏகாதசியையோட்டி வியாழக்கிழமை சேலம் கோட்டை அழகிரிநாதர் பெருமாள் கோயில் சொர்க்கவாசல் வாயிலாக வெளியே வரும் அழகிரிநாதர் உடன் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி.
வைகுந்த ஏகாதசியையோட்டி வியாழக்கிழமை சேலம் கோட்டை அழகிரிநாதர் பெருமாள் கோயில் சொர்க்கவாசல் வாயிலாக வெளியே வரும் அழகிரிநாதர் உடன் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி.

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டை அழகிரிநாத சுவாமி ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு வெகு விமரிசையாக நடைபெற்றது.

பக்தர்கள் இன்றி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் காலை 7 மணி முதல் அனுமதிக்கப்பட உள்ளனர்.

வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கம் திருக்கோவில் வெகு விமர்சையாக சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயிலில் வைகுந்த ஏகாதசி உற்சவம் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. இதனையொட்டி தினசரி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடைபெற்றது. கடைசி நாளான நேற்று கோட்டை அழகிரிநாதர் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனைத் தொடர்ந்து அழகிரிநாதர் சுவாமி திருக்கோயில் அதிகாலை 3 மணியிலிருந்து திருப்பாவை படிக்கட்டு பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து சரியாக 5 .15 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாததால், ஒரு சிலர் மட்டுமே சாமியை தரிசிக்க வந்திருந்தனர். அப்பொழுது கோவிந்தா கோவிந்தா என முழக்கங்கள் எழுப்பினர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் உயர் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் காவல்துறை மூலம் பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். முகக்கவசம் அணியாதவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

சொர்க்கவாசல் திறப்பையொட்டி ஆன்லைன் மூலம் ஆதார் அட்டை எண்ணை பதிவு செய்து பொது தரிசனம் அல்லது 25 ரூபாய் கட்டண தரிசனத்துக்கு முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் காலை 7 மணி முதல் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதேபோல சேலம் மாநகரில் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com