கந்தர்வகோட்டை அருகே முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
கந்தர்வகோட்டை அருகே முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்
கந்தர்வகோட்டை அருகே முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தச்சன்குறிச்சி கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழகத்தின் அனுமதி பெற்ற முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.

ஜல்லிக்கட்டு போட்டி தமிழக அரசின் உரிய அனுமதியுடன் வழிகாட்டுதல் முறையிலும் வியாழக்கிழமை சட்டத்துறை அமைச்சர் எஸ் . ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர் . மாவட்ட ஆட்சியர் கவிதாராமு முன்னிலை வகித்தார். 

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி , தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 650க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டன. இந்த ஜல்லிக்கட்டு காளைகளை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து ஒவ்வொரு களைகளாக ஜல்லிக்கட்டு திடலில் அவிழ்த்து விடப்பட்டது. இதில் மாடுபிடி வீரர்கள் நான்கு குழுக்களாக கலந்து  கொண்டு துள்ளி வந்த காளைகளை திமிலை பிடித்து அடக்கினார்.

காளையை அடக்கிய வீரர்களுக்கும் காளைகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. விழா ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் செய்து வருகின்றனர். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர், வட்டாட்சியர் சி. புவியரசன், காவல் ஆய்வாளர் அ .ம . செந்தில்மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com