பென்னிகுயிக் பிறந்தநாளை முன்னிட்டு பொங்கல் விழா 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகே பென்னிகுயிக் பிறந்தநாள் மற்றும் தைப்பொங்கல் நாளை முன்னிட்டு பொங்கல் விழா நடைபெற்றது. 
உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே பென்னி குயிக் பிறந்த நாள் மற்றும் தைப்பொங்கல் முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே பென்னி குயிக் பிறந்த நாள் மற்றும் தைப்பொங்கல் முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகே பென்னிகுயிக் பிறந்தநாள் மற்றும் தைப்பொங்கல் நாளை முன்னிட்டு பொங்கல் விழா நடைபெற்றது. 

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே பென்னி குயிக் பிறந்த நாள் மற்றும் தைப்பொங்கல் முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி கதிரவன் தலைமை தாங்கினார், மாவட்ட கவுன்சிலர் ரெட் காசி, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் மணிகண்டன், மாவட்டச் செயலாளர்கள் ஐ. ராஜா, ஆதிசேடன், மாநில நிர்வாகிகள்  பாஸ்கரபாஸ்கர பாண்டியன், வடிவேலு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி செயலாளர் பாண்டியன், கல்லூரி முதல்வர் ஒ.ரவி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் அன்புச் செழியன், லீலாவதி, பொறியாளர்கள் உதவிப் பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், உசிலம்பட்டி விவசாயிகள் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.

முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகே பென்னிகுயிக் பிறந்தநாள் மற்றும் தைப்பொங்கல் நாளை முன்னிட்டு நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி கதிரவன் மற்றும் உசிலம்பட்டி விவசாயிகள்.

இதில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் மக்களுக்கு அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கலில் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக முல்லைப் பெரியாறு அணை 1895 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அணையை பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் கட்டி முடித்தார். 

பென்னிகுயிக்கிற்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழக அரசு அவரது பிறந்த ஜனவரி 15 ஆம் நாளை அரசு விழாவாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com