மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு சற்று நேரத்தில் தொடங்குகிறது

மதுரையில் உலக புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. இதில் 700 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதற்கான நடவடிக்கைகள் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட 150 பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாலமேடு மஞ்சமலை சாமியாற்றில் அமைந்துள்ள வாடிவாசல் வழியாக காலை 7.30 மணியளவில் மாடுகள் அவிழ்த்துவிடப்படவுள்ளன. மாலை 4 மணி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. 

போட்டியில் வெற்றிபெறும் வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளுக்கும், கார், இருசக்கர வாகனம், கட்டில், பீரோ, தங்கம், வெள்ளி நாணயங்கள் வழங்கப்படவுள்ளன.

முன்னதாக வீரர்கள் அனைவரும் ஆட்சியர் உறுதி மொழி எடுத்துக்கொள்ளவுள்ளனர். அதனையடுத்து முதலில் கோயில் காளைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவை வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்படும். அதனைத் தொடர்ந்து போட்டி காளைகள் அவிழ்த்துவிடப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com