குறும்படம் எடுக்க கடத்தல் நாடகம்: இளைஞரை எச்சரித்து அனுப்பிய காவலர்கள்

வடபழனி பகுதியில் கடத்திச் சென்றதாக நாடகமாடிய மகனை காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து, செகந்திராபாத்தில் கண்டுபிடித்து மீட்டு சென்னைக்கு அழைத்து வந்து, எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
குறும்படம் எடுக்க கடத்தல் நாடகம்: இளைஞரை எச்சரித்து அனுப்பிய காவலர்கள்
குறும்படம் எடுக்க கடத்தல் நாடகம்: இளைஞரை எச்சரித்து அனுப்பிய காவலர்கள்

சென்னை:  வடபழனி பகுதியில் கடத்திச் சென்றதாக நாடகமாடிய மகனை காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து, செகந்திராபாத்தில் கண்டுபிடித்து மீட்டு சென்னைக்கு அழைத்து வந்து, எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

சென்னை, திருவல்லிக்கேணியில் வசித்து வரும் பென்சிலய்யா (54), கடந்த 13ஆம் தேதி அவரது மகன் கிருஷ்ணபிரசாத் (24) வடபழனியில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு சென்றதாகவும், அதன் பின்னர் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

வடபழனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில், பென்சிலய்யாவின் செல்போன் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அவரது மகன் கிருஷ்ணபிரசாத் செல்போன் வாட்ஸ்ஆப் எண்ணிலிருந்து உங்களது மகனை கடத்தி வைத்துள்ளோம், ரூ.30 லட்சம் பணம் கொடுத்தால் அவரை விடுவிப்பதாகவும் தகவல் அனுப்பப்பட்டது தெரிய வந்தது.

உடனே, காவல் ஆய்வாளர் திரு.பிரவீன் ராஜேஷ் தலைமையிலான காவல் குழுவினர், சைபர் கிரைம் உதவியுடன் கிருஷ்ணபிரசாத்தின் செல்போன் எண்ணின் அழைப்புகளின் விவரங்கள் மற்றும் இருப்பிடம் குறித்து ஆய்வு செய்தபோது, கிருஷ்ணபிரசாத், தெலுங்கானா மாநிலம், செகந்திரபாத்தில் இருப்பது தெரியவந்தது. 

அதன்பேரில், காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் செகந்திரபாத் சென்று, அங்கு தெலுங்கானா காவல் அதிகாரிகள் உதவியுடன், பெட்ஷீராபாத் காவல் நிலைய காவல் குழுவினருடன் செகந்திரபாத்தில் மறைந்திருந்த கிருஷ்ணபிரசாத்தை மீட்டு  சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், கிருஷ்ணபிரசாத்திற்கு சரியான வேலை இல்லாததாலும், குறும்படம் எடுக்க பணம் தேவைப்பட்டதாலும், தந்தையிடம் இருந்து பணம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், கிருஷ்ணபிரசாத் தன்னை யாரோ கடத்திச் சென்றதாகவும், பணம் கேட்டு கடத்தல் நாடகம் அரங்கேற்றியதும் தெரியவந்தது.

அதன்பேரில், காவல் உயரதிகாரிகள் உத்தரவின்பேரில், கடத்தல் நாடகமாடிய கிருஷ்ணபிரசாத்தை காவல் குழுவினர் கண்டித்தும், இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரித்தும், பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com