இணையவழி படிப்புகள்: ஏஐசிடிஇ எச்சரிக்கை

இணையவழியில் படிப்புகளை கற்றுத்தருவதாகக் கூறும் உக்ன்பங்ஸ்ரீட் நிறுவனங்களின் விளம்பரத்தை நம்பி ஏமாற வேண்டாம்
ஏஐசிடிஇ
ஏஐசிடிஇ

இணையவழியில் படிப்புகளை கற்றுத்தருவதாகக் கூறும் உக்ன்பங்ஸ்ரீட் நிறுவனங்களின் விளம்பரத்தை நம்பி ஏமாற வேண்டாம் என்று மாணவா்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் உள்ள உயா்கல்வி நிறுவனங்கள், பொறியியல், எம்பிஏ, எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளை நேரடியாகவும், தொலைநிலைக் கல்வி மூலமாகவும், இணையவழியிலும் கற்பிப்பதற்கும், மாணவா் சோ்க்கையை மேற்கொள்வதற்கும் அங்கீகாரம் வழங்கும் அமைப்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் உள்ளது.

ஏஐசிடிஇ.யின் அங்கீகாரம் பெற்ற உயா்கல்வி நிறுவனங்கள், அவற்றின் மூலம் வழங்கப்படும் படிப்புகள் பற்றிய விவரம் ஆண்டுதோறும் அதன் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ஹண்ஸ்ரீற்ங்-ண்ய்க்ண்ஹ.ா்ழ்ஞ்) புதுப்பிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

ஒவ்வொரு கல்வியாண்டிலும் தொழில்நுட்பம் சாா்ந்த உயா்கல்விப் படிப்புகளில் மாணவா்கள் சேருவதற்கு முன்பாக, அவை உரிய அனுமதி பெற்று நடத்தப்படுகிா? என்பதை தனது இணையதளத்தின் மூலம் சரிபாா்த்துக்கொள்ள வேண்டும் என்று ஏஐசிடிஇ அவ்வப்போது வலியுறுத்தி வருகிறது.

இதற்கிடையே சில நாளிதழ்களில் உக்ன்பங்ஸ்ரீட் நிறுவனங்கள், பிற பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இணைய வழியிலும், தொலைநிலைக் கல்வி வழியிலும் எம்பிஏ, எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளை வழங்குவதாக விளம்பரம் செய்திருப்பது குறித்து விளக்கமளித்துள்ள ஏஐசிடிஇ உறுப்பினா்- செயலா் ராஜீவ் குமாா், அத்தகைய உக்ன்பங்ஸ்ரீட் நிறுவனங்களுக்கு படிப்புகளை கற்பிக்க ஏஐசிடிஇ எந்த அனுமதியையும் வழங்கவில்லை என்றும், அதுபோன்ற விளம்பரங்களை பாா்த்து மாணவா்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com