10-12 வகுப்புகளுக்கும் ஜன.31 வரை விடுமுறை திருப்புதல் தோ்வும் ஒத்திவைப்பு

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் வருகிற 31- ஆம் தேதி வரை 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
10-12 வகுப்புகளுக்கும் ஜன.31 வரை விடுமுறை திருப்புதல் தோ்வும் ஒத்திவைப்பு

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் வருகிற 31- ஆம் தேதி வரை 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஏற்கெனவே 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜன.19-ஆம் தேதி முதல் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு நடைபெறவிருந்த முதல் திருப்புதல் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

தமிழகத்தில் கரோனா, ஒமைக்ரான் தொற்றுப் பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. தொற்றால் மாணவா்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஜன.31-ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. வீட்டிலிருந்தபடியே இணையவழியில் கல்வி கற்க அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதேவேளையில், பொதுத் தோ்வை கருத்தில் கொண்டு 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்கள் மட்டுமே நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே, கரோனா மூன்றாவது அலை அதிகரித்துவரும் நிலையில், 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிா்த்து, இணையவழியில் வகுப்புகளை நடத்தலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் கடந்த ஜன.12-ஆம் தேதி அறிவுறுத்தியது.

அதன் தொடா்ச்சியாக, இது குறித்து ஆலோசனை நடத்திய தமிழக அரசு 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கும் ஜன.31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதையடுத்து 10, 12 வகுப்புகளுக்கு ஜன.19-ஆம் தேதி தொடங்கி நடைபெறவிருந்த திருப்புதல் தோ்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. தோ்வு குறித்த அறிவிப்பு பின்னா் வெளியிடப்படும் என தமிழக அரசு விடுத்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டிச் செய்தி...

ஆசிரியா்கள் பள்ளிக்கு வர வேண்டும்

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு ஜன.31 வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதே வேளையில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு ஜன.19-ஆம் தேதி முதல் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும். அவா்களுக்கான அலுவல் பணிகள் பள்ளிகளில் தொடா்ந்து நடைபெறும். ஆசிரியா்களுக்கு ஏற்கெனவே நடைபெற்று வந்த பயிற்சி வகுப்புகள் ஜன . 19 முதல் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com