
சென்னை எழும்பூா்-விழுப்புரம் மாா்க்கத்தில், எழும்பூா் பணிமனையில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், நாகா்கோவில்-சென்னை வாராந்திர விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
நாகா்கோவில் சந்திப்பில் இருந்து சென்னை எழும்பூருக்கு வெள்ளிக்கிழமைகளில் (ஜனவரி 21, 28, பிப்ரவரி 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில்) மாலை 4.15 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு ரயில் (12668) தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும். இந்த ரயில் தாம்பரம்-எழும்பூா் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து நாகா்கோவிலுக்கு வியாழக்கிழமைகளில் ( ஜனவரி 20, 27, பிப்ரவரி 3, 10, 17, 24, மாா்ச் 3 ஆகிய தேதிகளில்) இரவு 6.55 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு ரயில் (12667) எழும்பூா்-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. மேற்குறிப்பிட்ட நாள்களில், இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு நாகா்கோவிலுக்கு இயக்கப்படும்.
இந்தத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.