
சிறுவாபுரி முருகன் கோவிலின் வாசலில் பக்தர்கள் தீபமேற்றி வழிபாடு செய்தனர்.
ஊத்துக்கோட்டை அருகே தைப்பூசத்தை முன்னிட்டு கோயில் மூடப்பட்டிருந்தாலும், சிறுவாபுரி முருகன் கோவிலின் வாசலில் பக்தர்கள் தீபமேற்றி வழிபாடு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த சிறுவாபுரியில் பிரசித்த பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
இதையும் படிக்க.. கரோனா பேரிடரால் பல சாதனைகளை முறியடித்த டோலோ-650 விற்பனை
தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து விளக்கேற்றி வழிபாடு செய்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தைப்பூசம் மற்றும் செவ்வாய்க்கிழமையான இன்று வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. கோவிலின் முன்பு காவலர்கள் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பக்தர்கள் கோவிலின் வெளியிலேயே தீபம் ஏற்றி முருகனை வழிபட்டு செல்கின்றனர். வழக்கமாக செவ்வாய்க்கிழமைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரளும் சூழலில் அரசு தடை விதித்துள்ளதால் இன்று குறைந்த அளவிலான பக்தர்களே சிறுவாபுரிக்கு வந்து செல்கின்றனர்.