
வண்டலூர் உயிரியல் பூங்கா
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 17 வயதான பெண் சிறுத்தை ஜெயா செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூங்காவில் பணிபுரியும் 76 ஊழியர்களுக்கு கடந்த வாரம் கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் வண்டலூர் பூங்காவில் பொதுமக்களுக்கு தடைவிதித்து மூடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிறுத்தைகளுக்கு கரோனா பரிசோதனை செய்வதற்காக கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் ஜெயா என்ற 17 வயது சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
கூண்டில் அடைக்கப்பட்ட சிறுத்தை இயந்திர கோளாறு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வத் தகவல் இதுவரை வெளியாகவில்லை.
ஆனைமலை வனப்பகுதியிலிருந்து கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட ஜெயா என்ற சிறுத்தையை வண்டலூரில் பராமரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.