
நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசிகள் ஜனவரி 10ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழகத்தில் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ஏற்கனவே நடைபெற்று வரும் சனிக்கிழமை சிறப்பு முகாம்களும் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்தார்.