
புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர்.
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி முருகன் கோயில்களில், தைப்பூசத்தையொட்டி சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடியில் வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில், மூலவருக்கு தேன், பால், சந்தனம், இளநீர் அபிேஷக ஆராதனைகள் நடைபெற்றது. அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பேளூர் வெள்ளிமலை வேல்முருகன் கோயிலில் மூலவருக்கு சந்தனாபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. மூலவர் வேல்முருகன், ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார்.

கொட்டவாடி கந்தசாமி கோயில், பாலசுப்பிரமணியர் கோயில், வாழப்பாடி புதுப்பாளையம், சின்னகிருஷ்ணாபுரம் கந்தசாமி கோயில்கள், அத்தனுார்பட்டி, துக்கியாம்பாளையம் முருகன் கோயில்களிலும், அபிேஷக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.