Enable Javscript for better performance
வலங்கைமான் அருகே பாடகச்சேரி பைரவசித்தர் திருமடத்தில் தைப்பூச விழா- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    வலங்கைமான் அருகே பாடகச்சேரி பைரவசித்தர் திருமடத்தில் தைப்பூச விழா

    By DIN  |   Published On : 18th January 2022 11:51 AM  |   Last Updated : 18th January 2022 11:51 AM  |  அ+அ அ-  |  

    swamy

    பாடகச்சேரி மகான் பைரவசித்தர் என அழைக்கப்பெறும் ஶ்ரீராமலிங்கசுவாமிகள்.

     

    நீடாமங்கலம்: வலங்கைமான் அருகேயுள்ள பாடகச்சேரி ராமலிங்கசுவாமிகள் மடத்தில் தைப்பூச திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் - கும்பகோணம் சாலையில் பாடகச்சேரி பேருந்து நிறுத்தத்திலிருந்து இரண்டரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பாடகச்சேரி கிராமம்.

    இந்த கிராமம் வலங்கைமான் வட்டத்தைச் சேர்ந்தது. ராமலிங்க சுவாமிகள் வாழ்ந்த கிராமம் என்பதால்  இந்த கிராமம் ஆன்மீக பூமியாகவும் சிறப்பிற்குரியது.

    ராமலிங்க சுவாமிகளை பாடகச்சேரி மகான், பைரவசித்தர் என்றும் பக்தர்கள் அழைப்பர். ராமலிங்க சுவாமிகளுக்கு பாடகச்சேரியில்  ஒரு மடம் உள்ளது. 

    இந்த மடத்தில் பக்தர்கள் தியானம் செய்து சுவாமிகளை வழிபட்டு வருகின்றனர். பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் அல்லது பாடகச்சேரி சுவாமிகள் (1876-1949) கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்து வலங்கைமானுக்கருகில் உள்ள பாடகச்சேரியில் தனது 12 வயதிலிருந்து வாழ்ந்தவர். 
    வள்ளலார் அருள் பெற்றவர். மக்களின் பசிப்பிணி, உடற்பிணி தீர்க்கும் பணியோடு கோயில்களைச் சீரமைக்கும் பணிகளையும் ஆற்றியவர். இத்தகைய சிறப்பிற்குரியவரான பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் மடத்தில் செவ்வாய்க்கிழமை தைப்பூச திருவிழா அதிவிமரிசையாக நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு ராமலிங்கசுவாமிகள் திருவுருவ படத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

    திருமடத்தின் பூசாரி சேகர் என்கிற நாராயணசாமி சிறப்பு ஆராதனைகளை செய்து வைத்து பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார். மதியம் அன்னதானம் நடந்தது.

     


    TAGS
    Thaipusam

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp