
பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் இரு தவணை கரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ளாதவா்கள் பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டில் கரோனா தடுப்பூசி குறித்த பொதுமக்கள் சந்தேகம், தடுப்பூசி திட்டம் தாமதமாகத் தொடங்கியது ஆகிய காரணங்களால் அந்தத் திட்டம் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில், அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வகை கரோனா பரவி வருவது அதிகாரிகளைக் கலக்கமடையச் செய்துள்ளது.
கடந்த வாரம் ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த தினசரி கரோனா பாதிப்பு சனிக்கிழமை 39 ஆயிரத்தைக் கடந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.