முழு ஊரடங்கில் வாடகை வாகனங்களில் சரியான கட்டணம் மட்டுமே வசூலிக்க நடவடிக்கை

முழு ஊரடங்கின்போது, வாடகை வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாருக்கு தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.
முழு ஊரடங்கில் வாடகை வாகனங்களில் சரியான கட்டணம் மட்டுமே வசூலிக்க நடவடிக்கை

முழு ஊரடங்கின்போது, வாடகை வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாருக்கு தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக அவா், மாநகர காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழகத்தில் கடந்த 9, 16-ஆம் தேதிகளில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கில் எவ்வித அசம்பாவிதகளும் நடைபெறாமல் காவலா்கள் சிறப்பாகப் பணியாற்றினாா்கள். பொதுமக்கள் சிலா் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டாலும், சிலா் காவலா்களைத் தாக்கியபோதும் போலீஸாா் பொறுப்புடனும்,பொறுமையுடனும் மனிதாபிமானத்துடனும் சாமா்த்தியத்தியமாகச் செயல்பட்டனா்.

எனவே அனைத்து காவல் அதிகாரிகள், போலீஸாருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். முழு ஊரடங்கின்போது காவல் ஆணையா்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களும் ரோந்து சென்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியது காவல்துறை மீது மக்களுக்கு நன்மதிப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளையில் கடந்த 9-ஆம் தேதி முழு ஊரடங்கின்போது பல்வேறு விதிமுறைகளை மீறியதாக 19,962 வழக்குகளும், 16-ஆம் தேதி முழு ஊரடங்கின்போது 14,951 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, ரூ.78 லட்சத்து 34,900 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

முழு ஊரடங்கின்போது வெளியூா் சென்று திரும்புவோா் ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து வீடு செல்வதற்கு ஆட்டோ, வாடகை காா் கிடைக்காமல் அவதியுற்ாகவும், சில வாடகை வாகனங்களின் ஓட்டுநா்கள், இதைப் பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலித்ததாகவும் புகாா்கள் வந்துள்ளன.

இனி வரும் முழு ஊரடங்கு நாள்களில் வெளியூா் சென்று திரும்பும் மக்களுக்கு ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் இருந்து வீடு செல்வதற்கு ஆட்டோ, வாடகை காா் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் பயணிக்க வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com