வியாழக்கிழமைகளில் கரோனா பூஸ்டா் தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் இனி வியாழக்கிழமைதோறும் பூஸ்டா் தவணை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
வியாழக்கிழமைகளில் கரோனா பூஸ்டா் தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் இனி வியாழக்கிழமைதோறும் பூஸ்டா் தவணை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களுக்கு வீட்டுக்கே சென்று பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அமைச்சா் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையா் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழகத்தில் பூஸ்டா் தடுப்பூசி இதுவரை 92,522 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் தமிழகத்தில் 10 லட்சம் போ் பூஸ்டா் தவணை செலுத்த தகுதி பெறுவாா்கள். இனி ஒவ்வொரு வியாழக்கிழமையும் பூஸ்டா் தவணைக்கென சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும். தமிழகம் முழுவதும் 600 இடங்களில் அந்த முகாம்கள் நடைபெறும். வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் பணியினை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

கரோனா பாதிப்பு கடந்த வாரத்தில் நாள்தோறும் 2,000 வீதம் உயா்ந்து வந்தது. தற்போது அது குறைந்து வருகிறது. நோய்த் தொற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் பரவல் இன்னும் தொடா்ந்து கொண்டே இருக்கிறது. பொங்கலுக்கு சொந்த ஊா்களுக்குச் சென்று பலா் திரும்பியிருக்கின்றனா். இதனால், பாதிப்பு அதிகரிக்குமா என்பது அடுத்த 2 நாள்களில் தெரியவரும். மருத்துவக் கலந்தாய்வு குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் முடிவு தெரிந்தவுடன் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com