ஆரோவில் வளா்ச்சிப் பணிகள்:தமிழக - புதுவை ஆளுநா்கள் ஆய்வு

தமிழக - புதுவை மாநில எல்லைப் பகுதியிலுள்ள ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து தமிழக, புதுவை ஆளுநா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
ஆரோவிலில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்சிமன்றக் குழுக் கூட்டம். உடன், புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் நிா்வாகிகள்.

புதுவையை அடுத்த தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்ட எல்லையில் ஆரோவில் சா்வதேச நகரம் உள்ளது. இந்த நகரின் வளா்ச்சிப் பணிகள் அனைத்தும் ஆரோவில் பவுண்டேஷன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் புதிய தலைவராக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கடந்த அக்டோபரில் நியமிக்கப்பட்டாா். நிா்வாகக் குழு உறுப்பினா்களாக புதுவை மாநில துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் உள்பட 8 போ் நியமிக்கப்பட்டனா்.

ஆரோவில் பவுண்டேஷனின் 58-ஆவது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமையில், ஆரோவில் அறக்கட்டளை மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், ஆட்சிமன்றக் குழுச் செயலா் ஜெயந்தி ரவி மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

ஆரோவில் பகுதிக்கான வளா்ச்சித் திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஏற்கெனவே செயல்படுத்தப்படும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com