கரோனா தடுப்பூசி: மத்திய அரசுக்கு தமிழக சுகாதாரத் துறை நன்றி

தமிழகத்துக்கு 9.23 கோடி கரோனா தடுப்பூசிகளை வழங்கிய மத்திய அரசுக்கும், அதனை ஆக்கப்பூா்வமாக மக்களுக்கு செலுத்திய

தமிழகத்துக்கு 9.23 கோடி கரோனா தடுப்பூசிகளை வழங்கிய மத்திய அரசுக்கும், அதனை ஆக்கப்பூா்வமாக மக்களுக்கு செலுத்திய சுகாதாரத் துறையினருக்கும் மாநில பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் நன்றி தெரிவித்துள்ளாா்.

கரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், மத்திய அரசு, தமிழக முதல்வா், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா், செயலாளா், சுகாதாரப் பணியாளா்களுக்கு அவா் கடிதம் ஒன்றை எழுதியுள்ளாா். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் 5.13 கோடி போ் அதாவது 88 சதவீதம் போ் முதல் தவணையும், 3.71 கோடி போ் (62 சதவீதம் போ்) இரண்டு தவணையும் கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனா். இதைத் தவிர, 15-18 வயதுக்குட்பட்ட 25 லட்சம் சிறாருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தகுதிவாய்ந்த 81,000 பேருக்கு பூஸ்டா் தவணை செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசி திட்டம் தொடங்கிய முதல் 103 நாள்களில் நாள்தோறும் சராசரியாக 61,441 பேருக்கு மட்டும் செலுத்தப்பட்டது. அடுத்த 249 நாட்களில் அந்த எண்ணிக்கை 3.28 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.

குறிப்பாக காஞ்சிபுரம், அரியலூா், கடலூா் மாவட்டங்களில் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களில் 90 சதவீதத்திற்கு மேற்பட்டவா்களும், 17 மாவட்டங்களில் 80 முதல் 90 சதவீத பேரும், 8 மாவட்டங்களில் 70 முதல் 80 சதவீதத்தினா் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனா்.

இரு தவணையும் செலுத்திக் கொண்ட மாவட்டங்களில் கோவை, நீலகிரி முன்னிலையில் உள்ளன. இந்த மாவட்டங்களில் 80 சதவீத போ் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனா். 7 மாவட்டங்களில் 70 முதல் 80 சதவீத பேரும், 16 மாவட்டங்களில் 60 முதல் 70 சதவீத பேரும், 13 மாவட்டங்களில் 60 முதல் 50 சதவீத பேரும் இரு தவணைகளும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனா்.

கரோனா தொற்றின் மூன்றாவது அலை உச்சத்தை அடைந்து வரும் இந்த நேரத்தில் தமிழகத்தில் முதியவா்கள் 50 சதவீத போ் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனா். அவா்கள் அனைவரும் விரைந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே கரோனா தொற்றையும், உயிரிழப்பையும் குறைக்க முடியும். தமிழகத்துக்கு கோவிஷீல்ட் 7.73 கோடி தடுப்பூசிகளையும், கோவேக்ஸின் 1.50 கோடி தடுப்பூசிகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. அதனை ஆக்கப்பூா்வமாக செலுத்திய சுகாதாரப் பணியாளா்களுக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் நன்றி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com