தருமபுரியில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தருமபுரி மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
தருமபுரியில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
தருமபுரியில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தருமபுரி மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (20.1.2022) தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி வாயிலாக தருமபுரி மாவட்டத்தில் 56 கோடியே 20 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 46 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 35 கோடியே 42 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 591 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 13,587 பயனாளிகளுக்கு 157 கோடியே 41 இலட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முடிவுற்ற திட்டப்பணிகளின் விவரங்கள்
உயர் கல்வித் துறையின் சார்பில் பாலக்கோடு அரசினர் பல்வகை தொழில் நுட்பக் கல்லூரி, 
காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு கலைக்கல்லூரி ஆகிய கல்லூரிகளில் 21 கோடியே 12 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், பணிமனைக் கட்டடங்கள்,
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பாப்பிரெட்டிபட்டி வட்டம், கோழிமேக்கனூரில் 14 கோடியே 1 இலட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 168 குடியிருப்புகளுடன் கூடிய புதிய அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம்,

இதையும் படிக்க.. நேரடியாகப் பருவத்தேர்வு: தமிழக கல்லூரிகள் பிடிவாதம்

ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 9 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக் கூடங்கள், உணவருந்தும் கூடக் கட்டடங்கள்,
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 10 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 8 கோடியே 53 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஆய்வகங்கள், கழிப்பறைகள்.
குழந்தைகள் இல்லம் மற்றும் வகுப்பறைகள்,
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் ரூபாய் 1 கோடியே 35 இலட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் தருமபுரி மதுபானக் கிடங்கில் கூடுதல் அலுவலகக் கட்டடங்களையும், கூட்டுறவுத் துறையின் சார்பில் பாப்பிரெட்டிபட்டியில் 80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையின் புதிய அலுவலகக் கட்டடம்,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் நில அளவை பிரிவிற்கு மாரண்டஅள்ளி, காரிமங்கலம், கடத்தூர் மற்றும் தருமபுரி ஆகிய இடங்களில் 67 இலட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குறுவட்ட நில அளவர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புக் கட்டடங்கள்,
கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் அரூர் வட்டம், நரிப்பள்ளியில் 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தகக் கட்டடம்,
என மொத்தம் 56 கோடியே 20 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 46 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.

அடிக்கல் நாட்டப்பட்ட புதிய திட்டப்பணிகளின் விவரங்கள்
ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 35 கோடியே 42 இலட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 591 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சிதுறை, பேரூராட்சிகள்துறை, பழங்குடியினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, சமூக பாதுகாப்புத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழில் வணிகத்துறை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக் கலைத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மற்றும் வனத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 13,587 பயனாளிகளுக்கு 157 கோடியே 41 இலட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com