ஊரடங்கில் ப்ரீபெய்டு ஆட்டோ சேவைக்கு அனுமதி: காவல்துறை

ஊரடங்கின்போது சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் ப்ரீபெய்டு ஆட்டோ சேவைக்கு அனுமதி அளித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 
ஊரடங்கில் ப்ரீபெய்டு ஆட்டோ சேவைக்கு அனுமதி: காவல்துறை

ஊரடங்கின்போது சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் ப்ரீபெய்டு ஆட்டோ சேவைக்கு அனுமதி அளித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 
இதுகுறித்து பெருநகர சென்னை காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசு வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 05.00 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நாளும், முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் 10% பயணிகள், குறிப்பாக விமான நிலையம் மற்றும் இரயில் நிலையங்களுக்கு செல்பவர்கள் டாக்சி மற்றும் ஆட்டோக்கள் கிடைப்பதில் சிரமங்களும், அதிக கட்டணம் செலுத்தியும் அவதிப்படுவதாக தகவல்கள் கிடைத்தன. அதன்பேரில், ஊரடங்கு சமயங்களில் இரயில் சேவைகள் முழுவதுமாக இயக்கப்படுவதால் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்டிரல் இரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில், இரயில் மூலம் வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகள் சிரமப்பட்டதாக தெரியவந்தது.
எனவே, பொதுமக்களின் இச்சிரமத்தை தவிர்க்க, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் கபில்குமார் சி.சரத்கர், தலைமையில், மேற்படி சென்டிரல் மற்றும் எழும்பூர் இரயில் நிலைய ஆட்டோக்கள் மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் சங்கங்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு, பின்வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன;

 முன்னர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஊரடங்கு சமயத்தில் ப்ரீபெய்டு ஆட்டோ சேவை செயல்படாமல் இருந்தது. தற்போது, ​​செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
 எழும்பூர் ரயில் நிலையத்தில் ப்ரீபெய்டு ஆட்டோ சேவை செயல்படாமல் இருந்தது. ஆனால் தற்போது ரயில்வே அதிகாரிகள் 10 ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர். சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துழைப்பார்கள்.
 அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆட்டோ, டாக்சி சங்கங்களுக்கு தெளிவாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 பயணிகளை இறக்கிவிட்டு வாகனங்கள் வெறுமையாக திரும்பும்போது, போலீசார் வாகனத்தை நிறுத்தி அவர்களை சிறைபிடிப்பதாக சங்கங்கள் புகார்
கூறியுள்ளர். காவல்துறையினர் சோதனையின்போது வாகன ஒட்டுனர்கள் பயணிகளின் ரயில் டிக்கெட்டின் பிரதியை தங்களது கைப்பேசியல் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து போக்குவரத்து மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்துறையினருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
 போக்குவரத்து காவல் உயர் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் மேற்கூறிய அனைத்து சங்கத்தினரருக்கும் அளிக்கப்பட்டு, ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 ஓலா மற்றும் உபர் டாக்சிகளின் அதிகாரிகள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் கூட்டம் 20.01.2022 அன்று நடத்தப்பட்டு அவர்களுக்கும் மேற்கண்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. மேலும், ஒட்டுனர்கள் பயணிகளை அவர்கள் இடத்தில் இறக்கிவிட்டு திரும்பி காலியாக வருவதனால் கட்டணத்தை உயர்த்த
முடிவு செய்துள்ளனர். இது குறித்து ஓலா மற்றும் உபர் அதிகாரிகள் இதை ஏற்கனவே தங்கள் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இது சம்பந்தமாக முடிவு செய்யப்படவுள்ளது.
 காவல்துறை உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையினருடன், போக்குவரத்து துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட தமிழ்நாடு போக்குவரத்து ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com