சென்னை விமான நிலையத்தில் ரூ.7 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை மாத்திரைகள் பறிமுதல்

உகாண்டாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ 7 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் ரூ.7 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை மாத்திரைகள் பறிமுதல்

உகாண்டாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ 7 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
உகாண்டாவில் இருந்து சென்னைக்கு நேற்று அதிகாலை 3 மணிக்கு ஏர் ஃபிளைட் அரேபியா மூலம் வந்திறங்கிய ஜூடித் டிவினாம்வெபெம்பெசி (29), சென்னை சுங்கத்துறையின் விமான நிலைய அதிகாரிகளால் பயணிகளின் விவர சேகரிப்புக்காக தடுத்து நிறுத்தப்பட்டார். 
அவரைச் சோதனை செய்து பார்த்தபோது, அவரது உள்ளாடைகளுக்குள் 108 கேப்சூல் வடிவ மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவற்றில் 1.07 கிலோ எடையிலான சுமார் ரூ 7 கோடி மதிப்பிலான ஹெராயின் இருந்தது. 

தேசிய போதைப்பொருள் தடுப்பு சட்டம் மற்றும் சுங்க சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். துபையில் இருந்து சென்னைக்கு நேற்று எமிரேட்ஸ் விமானம் மூலம் வந்திறங்கிய ராமநாதபுரம் மாவட்டம், சுந்தரபாண்டியன் பட்டிணத்தைச் சேர்ந்த முகமது ஆசிக் சென்னை சுங்கத்துறையின் விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். 
அவரைச் சோதனை செய்து பார்த்தபோது, 1.52 கிலோ 24 கேரட் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ 69.44 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் மின்னணுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து மேலும் விசராணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com