எடப்பாடி நகராட்சி பகுதியில் ரூ.76 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகள் தொடக்கம்

எடப்பாடி நகராட்சி பகுதிக்கு உள்ளிட்ட  இடங்களில், புதிய சாலைகள், குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான திட்ட பணிகள் இன்று  தொடங்கி வைக்கப்பட்டது
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக நிர்வாகிகள்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக நிர்வாகிகள்.

எடப்பாடி: எடப்பாடி நகராட்சி பகுதிக்கு உள்பட்ட ஆலச்சம்பாளையம், மேட்டு தெரு, குலாலர் தெரு, கவுண்டம்பட்டி, சின்ன மணலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், புதிய சாலைகள், குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான திட்ட பணிகள் இன்று காலை தொடங்கி வைக்கப்பட்டது. 

முன்னதாக எதிர்க்கட்சித் தலைவரும், எடப்பாடி சட்டப்பேரவை உறுப்பினருமான எடப்பாடி கே.பழனிசாமி, தனது பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 76 லட்சம் மதிப்பீட்டில் இத்திட்டப் பணிகளை தொடங்கிட ஆலோசனைகள் வழங்கினார். 

நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஏ.எம். முருகன், முன்னாள் நகரமன்ற தலைவர் கதிரேசன், முன்னாள் துணைத்தலைவர் ராமன், நாராயணன், தங்கவேல் உள்ளிட்ட திரளான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com