கும்பகோணம்: புதிதாகக் கட்டப்பட்டு வந்த அணைக்கரை பாலம் இடிந்து விழுந்தது

கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றின் மீது புதிதாகக் கட்டப்பட்டு வந்த அணைக்கரை பாலத்தின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது.
புதிதாகக் கட்டப்பட்டு வந்த அணைக்கரை பாலம் இடிந்து விழுந்தது
புதிதாகக் கட்டப்பட்டு வந்த அணைக்கரை பாலம் இடிந்து விழுந்தது

கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றின் மீது புதிதாகக் கட்டப்பட்டு வந்த அணைக்கரை பாலத்தின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது.

தஞ்சை மாவட்டத்தை சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுடன் இணைக்கும் வகையில் புதிதாக 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ‘அணைக்கரை’ பாலம் இடிந்து விழுந்தது.

பழைய பாலத்திற்கு மாற்றாக ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டு வந்த நிலையில், எதிர்பாராத வகையில், பாலத்தின் சிமெண்ட் பலகை இடிந்து விழுந்தது. 

விக்கிரவாண்டி - தஞ்சையை இணைக்கும் வகையில் மத்திய அரசின் நாற்கர சாலை திட்டத்தின் கீழ்  100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பால பணிகள் வெகு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

புதிய பாலத்தின் 5வது தூண் அருகே இணைப்புக்காக போடப்பட்டிருந்த சிமெண்ட் பலகை இடிந்து ஆற்றில் விழுந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொள்ளிடம் ஆற்றைக் கடக்கும் வகையில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வந்த பழைய பாலத்திற்கு பதில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்ற வந்த நிலையில், இன்று இந்த விபத்து நேரிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com