மகாத்மாவின் விருப்பத்துக்குரிய பாடல் குடியரசு தின நிகழ்ச்சியிலிருந்து நீக்கம்: சு.வெங்கச்டேசன் எம்.பி. எதிர்ப்பு

மகாத்மாவின் விருப்பத்துக்குரிய பாடல் குடியரசு தின நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதற்கு மதுரை எம்.பி., சு.வெங்கச்டேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சு.வெங்கடேசன் எம்.பி.
சு.வெங்கடேசன் எம்.பி.

மகாத்மாவின் விருப்பத்துக்குரிய பாடல் குடியரசு தின நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதற்கு மதுரை எம்.பி., சு.வெங்கச்டேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் ஜனவரி 26-ஆம் தேதி முதல் 4 நாள்களுக்கு குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதையொட்டி நாடு முழுவதிலும் இருந்து பாதுகாப்புப் படைகள் தில்லிக்கு வருவது வழக்கம். ஜனவரி 29-ஆம் தேதி குடியரசு தின கொண்டாட்டங்கள் நிறைவடையும். அன்றைய தினம் முப்படைகளின் தலைவரான குடியரசுத் தலைவா் தில்லிக்கு வந்த பாதுகாப்புப் படைகளை தங்கள் முகாம்களுக்கு திருப்பி அனுப்பி வைப்பாா். 
இதுவே பாதுகாப்புப் படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சி என்றழைக்கப்படுகிறது. தில்லி விஜய் செளக்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் மகாத்மா காந்தியின் விருப்பத்துக்குரிய ‘என்னுடன் இருங்கள்’ பாடல் இசைக்கப்படுவது வழக்கம். பிரிட்டனில் பிறந்த ஹென்றி பிரான்சிஸ் லைட் என்ற கவிஞரால் 1847-ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த கிறிஸ்தவ பாடல், 1950-ஆம் ஆண்டுமுதலே குடியரசு தின நிகழ்ச்சியில் இடம்பெற்று வந்தது. இந்நிலையில், இவ்வாண்டு பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சியிலிருந்து அந்தப் பாடல் நீக்கப்பட்டுள்ளது. 

அதற்குப் பதிலாக கவிஞா் முகமது இக்பால் எழுதிய புகழ்பெற்ற ‘சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா’ (ஒட்டுமொத்த உலகத்தையும்விட மேலானது இந்தியா) பாடல் இசைக்கப்படவுள்ளது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்விற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த வகையில் மகாத்மாவின் விருப்பத்துக்குரிய பாடல் குடியரசு தின நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதற்கு மதுரை எம்.பி., சு.வெங்கச்டேசனும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், 
திருவாசகத்தைப் போன்று மனதை உருக்கும் பாடல். 
எல்லா மதத்தினருக்கும் ஏற்புடைய பாடல்.
அண்ணல் காந்தியாருக்கு மிகப்பிடித்தப் பாடல்.
சூழும் இருளின் அச்சம் போக்கும் ஒளியே இறைவன்.
ஒளியை நீக்கி அச்சம் பரப்பும் இருளே சாத்தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com