செங்கல்பட்டில் குடியரசு நாள் விழா: ஆட்சியர் கொடியேற்றினார்

மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து 60 பயனாளிகளுக்கு  ரூ 42லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . 
மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்துகிறார்
மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்துகிறார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 73வது குடியரசு நாள் விழா. மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து 60 பயனாளிகளுக்கு  ரூ 42லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . 

செங்கல்பட்டு:  செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு வேத நாராயணபுரம் அரசு ஐடிஐ வளாகத்தில் 73வது குடியரசு நாள் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

காவலர்களின்  அணிவகுப்பை ஏற்கிறார் மாவட்ட ஆட்சியர் 
காவலர்களின்  அணிவகுப்பை ஏற்கிறார் மாவட்ட ஆட்சியர் 

பின்னர் குடியரசு நாள்விழாவில் 50 பயனாளிகளுக்கு ரூ. 42 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.  காவலர்களுக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களையும்  சான்றிதழ்களையும் வழங்கினார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டம் சாலை விபத்து ஆதரவற்ற விதவை சான்றிதழ் ஆகியவையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இலவச சலவை பெட்டிகளும்,

 நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் மாவட்ட ஆட்சியர்
 நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் மாவட்ட ஆட்சியர்

மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்திலும் வழங்கப்பட்டது.

 நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் மாவட்ட ஆட்சியர்
 நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் மாவட்ட ஆட்சியர்

, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் சார்பில் உற்பத்தியாளர் குழுவிற்கான துவக்க நிதி ,சமுதாய திறன் பள்ளி இரு சக்கர வாகனம் பழுது பார்த்தல் சமுதாய பண்ணைப் பள்ளி காய்கறி சாகுபடி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செயற்கைக், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியும் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்குதல்,

 நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் மாவட்ட ஆட்சியர்
 நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் மாவட்ட ஆட்சியர்

வேளாண்மை துறை சார்பில் அட்மா தென்னை மரம் ஏறும் கருவி தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் விதை தெளிப்பு கருவி பிரதம மந்திரியின் விவசாய நுண்ணீர் பாசனத் திட்டம்  தோட்டக் கலை  சார்பில் பழச் செடிகள் வழங்குதல், தாட்கோ சார்பில் தொழில் முனைவோர் திட்டத்தின் பயனாளிகள் ,வேளாண் பொறியியல் துறை சார்பில் களை எடுக்கும் கருவிகள் உள்ளிட்ட துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்  50 பயனாளிகளுக்கு ரூ. 42.30 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட  வழங்கப்பட்டது.

 நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் மாவட்ட ஆட்சியர்
 நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் மாவட்ட ஆட்சியர்

மேலும் காவல்துறை, துறை வருவாய்த்துறை அமைப்பு துறையும் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பட்சேரா,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், வருவாய் கோட்டாட்சியர்கள் அறிவுடைநம்பி, சாஜிதா பர்வீன் சரஸ்வதி முதன்மை கல்வி அலுவலர் ரோஸ்நிமலாமேரி உள்ளிட்ட  அனைத்து அரசுதுறை அலுவலர்கள் பணியாளர்கள்  கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com