
உதகையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி.
நீலகிரி மாவட்டத்தில் 73 ஆவது குடியரசு நாளையொட்டி, கரோனா விதிமுறைகளை பின்பற்றி, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நீலகிரி மாவட்டத்தில் குடியரசு தின விழா எளிமையாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்திற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இதையும் படிக்க | சிவகாசியில் பிரசவத்தில் பெண் இறப்பு: இழப்பீடு கோரி உறவினர்கள் போராட்டம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிக்ஷ் ராவத் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டத்தில் அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 94 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...