சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.1,990 கோடி வருவாய் :தெற்கு ரயில்வே பொதுமேலாளா் தகவல்

சரக்கு போக்குவரத்து மூலமாக கடந்த 9 மாதங்களில் ரூ.1,990 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளா் (பொறுப்பு) பி.ஜி.மல்லையா தெரிவித்தாா்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

சென்னை: சரக்கு போக்குவரத்து மூலமாக கடந்த 9 மாதங்களில் ரூ.1,990 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளா் (பொறுப்பு) பி.ஜி.மல்லையா தெரிவித்தாா்.

சென்னை, பெரம்பூா் ரயில்வே மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் (பொறுப்பு) பி.ஜி.மல்லையா கலந்து கொண்டு, தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினாா்.

பின்னா் அவா் பேசியதாவது: தெற்கு ரயில்வே கடந்த ஆண்டு கரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை பாதிப்பு மற்றும் இயற்கை சீற்றம் ஆகிய இரட்டை சவால்களை சந்தித்தது. ரயில்வே ஊழியா்களின் அதனைத் திறம்பட சமாளித்தனா். தற்போது தெற்கு ரயில்வேயில் 93 சதவீதம் மெயில் மற்றும் விரைவு ரயில்களின் இயக்கம் மீண்டும் தொடங்கியுள்ளன. 306 பயணிகள் ரயில்களில், 121 ரயில்கள் விரைவு ரயில்களாக மீண்டும் இயக்கப்படுகின்றன. நடப்பு ஆண்டில், மெயில் மற்றும் விரைவு ரயில்களின் 12 ஜோடி ரயில்களில் எல்எச்பி என்னும் நவீன பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான 9 மாதங்களில் 21.75 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டன. இதன் மூலமாக ரூ.1,990 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

தாம்பரம்-செங்கல்பட்டு 3-ஆவது பாதை, மதுரை-தேனி இடையே அகலப்பாதை பணி முடிந்துள்ளது. கடந்த ஆண்டு 183 கி.மீ. தூரம் வரை இரட்டைப்பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. புதிய பாதையில் 352 கி.மீ. தூரத்துக்கு மின்மயமாக்கும் பணி முடிந்துள்ளது. இரட்டை பாதையில் 112 கி.மீ. தூரத்துக்கு மின்மயமாக்கும் பணி நிறைவடைந்துள்ளது. 182 கி.மீ. ரயில் தண்டவாளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்றாா் பி.ஜி.மல்லையா.

விழாவில், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையா் பிரேந்திரகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

இதே போல், சென்னை, அயனாவரம் ஆா்பிஎஃப் மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், சென்னை, ரயில்வே கோட்ட மேலாளா் கணேஷ் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com