
கோப்புப் படம்
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியானார்.
விருதுநகர் மாவட்டம், மூலிப்பட்டியிலுள்ள பட்டாசு தயாரிப்பு ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆறுமுகம் என்பவர் பலியானார். மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.
உடனடியாக இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.