
நியோகோவ் வகை கரோனா பற்றி பீதி வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, நியோகோவ் வகை கரோனா வௌவ்வாலில் இருந்து வௌவ்வாலுக்கு பரவக்கூடியது. நியோகோவ் கரோனா தொடர்பாக தேவையற்ற கருத்துகளைப் பகிர வேண்டாம்.
தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பாதுகாப்பு என்பதை மக்கள் உணர வேண்டும்.
ஜன.29 வரை கரோனாவால் உயிரிழந்த 730 பேரில் 435 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள். கரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 5% பேர் மட்டுமே மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
இதையும் படிக்க- ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி விலகாமல் வேட்புமனு தாக்கல் செய்தால் தகுதி நீக்கப்படுவர்
தமிழகம் முழுவதும் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 10.17 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 18 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.