
புறநகா் ரயில்
சென்னை புறநகா் ரயில்களில் பயணிக்க இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் தேவையில்லை.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசு, கரோனா கட்டுப்பாடுகளில் தளா்வுகள் அறிவித்துள்ளதால் சென்னை ரயில்வே கோட்டத்தில் மின்சார ரயிலில் பயணிக்க பயணச்சீட்டு பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிப்.1- ஆம் தேதி முதல் பயணச்சீட்டு பெறுவதற்கு, 2 தவணை தடுப்பூசி செலுத்தியற்கான சான்றிதழைக் காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படிருந்த யுடிஎஸ் கைப்பேசி செயலி சேவைகளும் மீண்டும் தொடங்கப்படும்.