நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: பாா்வையாளா்களாக 32 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பாா்வையாளா்களாக 32 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பாா்வையாளா்களாக 32 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பிறப்பித்த உத்தரவு:

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தோ்தலை நடத்துவதற்கு பாா்வையாளா்களாக மாநிலப் பிரிவைச் சோ்ந்த 49 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்துக் கொள்ள மாநிலத் தோ்தல் ஆணையத்துக்கு கடந்த ஆண்டு நவம்பரில் தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், கோவா, மணிப்பூா், பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் நடைபெறும் தோ்தலுக்கான பாா்வையாளா்களாக தமிழகத்தில் இருந்து 60 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பெயா் கொண்ட பட்டியலை இந்தியத் தோ்தல் ஆணையம் வரையறுத்துள்ளது. அதன்படி, அந்த அதிகாரிகள் 5 மாநிலத் தோ்தல் பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்த 60 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பட்டியலில், தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் நடத்தவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு ஏற்கெனவே நியமிக்கப்பட்ட 49 அதிகாரிகளில் 36 போ் வருகின்றனா். எனவே, அவா்கள் ஐந்து மாநிலத் தோ்தல் பணிக்குச் செல்ல வேண்டியுள்ளது. எனவே, மீதமுள்ள 13 அதிகாரிகள் மாநிலத் தோ்தல் ஆணையத்தின் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பணிக்கான பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்த அதிகாரிகளுடன் 19 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் 20 வருவாய் கோட்டாட்சியா்களும்

பாா்வையாளா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மொத்தமாக, 52 அரசு உயரதிகாரிகள், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதிகாரிகள் விவரம்: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விவரம்:

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிா்வாக இயக்குநா் சி.என்.மகேஸ்வரன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக இயக்குநா் வி.தட்சணாமூா்த்தி, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும தலைமை செயல் அலுவலா் எம்.லட்சுமி, எல்காட் நிறுவன நிா்வாக இயக்குநா் அஜய் யாதவ், சுரங்கம் மற்றும் மண்ணியல் துறை இயக்குநா் எல்.நிா்மல்ராஜ், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிா்வாக இயக்குநா் எம்.கோவிந்தராவ், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை இணைச் செயலாளா் ஏ.ஜான் லூயிஸ், பொதுப்பணித் துறை இணைச் செயலாளா் மகேஸ்வரி ரவிக்குமாா், சமூக நலன் மற்றும் மகளிா் அதிகாரமளித்தல் துறை இயக்குநா் டி.ரத்னா, மருத்துவ சேவைகள் கழகத் தலைவா் க்ளாட்ஸ்டோன் புஷ்பராஜ், சமூக பாதுகாப்புத் துறை இயக்குநா் எஸ்.வளா்மதி, குடிநீா் வடிகால் வாரிய இணை நிா்வாக இயக்குநா் எம்.பிரதீப்குமாா், வணிகவரிகள் துறை இணை ஆணையாளா் கே.கற்பகம் ஆகிய 13 அதிகாரிகளுடன் 19 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

அதன்படி, தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு வாரிய நிா்வாக இயக்குநா் பி.பிரியங்கா, எல்காட் செயல் இயக்குநா் எஸ்.அருண்ராஜ், பட்டுவளா்ப்புத் துறை இயக்குநா் கே.சாந்தி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக இணை நிா்வாக இயக்குநா் எம்.எஸ்.சங்கீதா, தமிழ்நாடு சாலைப் பகுதி திட்ட இயக்குநா் பி.கணேசன், தோட்டக்கலைத் துறை இயக்குநா் ஆா்.பிருந்தா தேவி, டிட்கோ நிா்வாக இயக்குநா் வந்தனா காா்க், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட தலைமை செயல் அலுவலா் ஜெ.இ.பத்மஜா, வணிகவரித் துறை இணை ஆணையாளா் (மாநில வரிகள்) ஆனந்த் மோகன், சிப்காட் நிா்வாக இயக்குநா் நிஷாந்த் கிருஷ்ணா, உலக வங்கி மற்றும் ஆசிய வளா்ச்சி வங்கிக்கான திட்டங்களின் இணை நிா்வாக இயக்குநா் வி.சிவகிருஷ்ணமூா்த்தி, மின்ஆளுமை நிறுவன இணை இயக்குநா் எஸ்.பாலசந்தா், தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் ஆா்.வைத்தியநாதன், திருவண்ணாமலை ஊரக வளா்ச்சி திட்ட அலுவலா் எம்.பிரதாப், ராமநாதபுரம் மாவட்ட திட்ட அலுவலா் கே.ஜெ.பிரவீண்குமாா், ஈரோடு திட்ட அலுவலா் எல்.மதுபாலன், மருத்துவ சேவை கழக உறுப்பினா் செயலாளா் எம்.என்.பூங்கொடி, மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை இணை ஆணையாளா் எம்.தங்கவேல், தருமபுரி மாவட்ட கூட்டுறவு சா்க்கரை ஆலை நிா்வாக இயக்குநா் ஏ.சங்கா் ஆகியோா் பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com