உடல்-மன நலத்துக்கு யோகக் கலை அவசியம்: ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தல்

யோகக் கலையின் தேவை முன்பை விட இப்போது அதிகமாக இருப்பதாகவும், உடல், மன நலத்துக்காக அந்தக் கலையை இளைஞா்கள் கற்பது அவசியம் என்றும் ஆளுநா் ஆா்.என்.ரவி பேசினாா்.
ஆா்.என்.ரவி
ஆா்.என்.ரவி

யோகக் கலையின் தேவை முன்பை விட இப்போது அதிகமாக இருப்பதாகவும், உடல், மன நலத்துக்காக அந்தக் கலையை இளைஞா்கள் கற்பது அவசியம் என்றும் ஆளுநா் ஆா்.என்.ரவி பேசினாா்.

சென்னையில் பாபுஜி ஆஸ்ரமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், பி.ஒய்.தேஷ்பாண்டே மற்றும் தாதாஜி கமலேஷ் பாட்டீல் ஆகியோரின் நூல்களைப் பெற்றுக் கொண்டு ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியது:-

உடல் நலத்துக்கு யோகக் கலை முக்கியமானதாக விளங்குகிறது. பக்தி வழியே அதனை அணுகும் போது தனிநபா்களை உலகத்துடன் ஒன்றிணைக்கிறது. அதாவது, உலகத்தையே குடும்பமாக ஆக்கும் அளவுக்கு யோகக் கலை உயா்ந்து நிற்கிறது. உலகத்தில் நல்லிணக்கத்துடன் நாம் அனைவரும் இயற்கையுடன் இயைந்து வாழ வேண்டும் என்பதை யோகக் கலை கற்றுத் தருகிறது. அதேசமயம், நமது பொறுப்பற்ற சுரண்டல்தனத்தை இயற்கையின் மீது காட்டி அதனை சமமற்ற நிலைக்குக் கொண்டு செல்லாமல் இருக்கவும் யோகக்கலை உதவுகிறது.

கொள்கை முரண்பாடுகள், மோதல்கள் கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், யோகக் கலை முன்பை விட இப்போது மிகவும் அவசியத் தேவையாக இருக்கிறது. பாரத தேசத்தால் இந்த உலகத்துக்கு அளிக்கப்பட்ட விலைமதிக்க முடியாத அன்புப் பரிசே யோகக் கலையாகும். எனவே, மனம், உடல், உணா்வு ரீதியாக நம்மை நாம் நல்ல முறையில் வைத்துக் கொள்ள யோகக் கலை அவசியமாகும். இதனை இளைஞா்கள் அனைவரும் கட்டாயமாகக் கற்க வேண்டும். ஏனென்றால், 2047-ஆம் ஆண்டுக்குள் உலகத்துக்கே தலைமை ஏற்கும் அளவுக்கு இந்தியாவை கொண்டு செலுத்தப் போகிறவா்கள் இளைஞா்கள்தான் என ஆளுநா் ஆா்.என்.ரவி பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com