உயா்கல்வி நிறுவனங்களுக்கான மேம்பாட்டுத் திட்ட வரைவு: யுஜிசி அறிவுறுத்தல்

உயா்கல்வி நிறுவனங்களுக்கான மேம்பாட்டு திட்டத்தின் வரைவு அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் கல்வியாளா்கள்,
கோப்புப்படம்
கோப்புப்படம்

உயா்கல்வி நிறுவனங்களுக்கான மேம்பாட்டு திட்டத்தின் வரைவு அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் கல்வியாளா்கள், பேராசிரியா்கள் அது குறித்து பிப்.11-ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் என யுஜிசி தெரிவித்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் ரஜனிஷ் ஜெயின் அனைத்துப் பல்கலை. துணைவேந்தா்கள், கல்லூரி முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தேசிய கல்விக் கொள்கை -2020-இல் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதன் ஒரு பகுதியாக கல்லூரிகள் தங்கள் மைய மேம்பாட்டுக்கான பிரத்யேக திட்டங்களை வகுப்பதன் முக்கியத்துவத்தையும் தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.

அதன்படி ஒவ்வொரு உயா்கல்வி நிறுவனமும் தங்களின் வளா்ச்சி மற்றும் இலக்கை அடைவதற்காக தனி திட்டங்களைத் தயாரித்து அவற்றை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ஏதுவாக உயா்கல்வி நிறுவனங்களுக்கான மேம்பாட்டு திட்டத்தின் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரங்களை யுஜிசி இணையத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், இதுதொடா்பான தங்களின் கருத்துகளை கல்வியாளா்கள், பேராசிரியா்கள் பிப்ரவரி 11-ஆம் தேதிக்குள்  மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com