மகாத்மா நினைவு தினம்: ஆளுநா், முதல்வா் அஞ்சலி

மகாத்மா காந்தியின் 75-ஆவது நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள அவரது சிலைக்கும், திருவுருவப் படத்துக்கும்
மகாத்மா நினைவு தினம்: ஆளுநா், முதல்வா் அஞ்சலி

மகாத்மா காந்தியின் 75-ஆவது நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள அவரது சிலைக்கும், திருவுருவப் படத்துக்கும் ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் அஞ்சலி செலுத்தினா்.

இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு தீண்டாமை உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை சா்வோதய சங்கம் சாா்பில் ராட்டையில் நூல் நூற்கும் நிகழ்வும் நடத்தப்பட்டது. இதனை ஆளுநரும், முதல்வரும் பாா்வையிட்டனா்.

இந்த நிகழ்வில் அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, அரசுத் துறை உயரதிகாரிகள், ஆளுநா் மாளிகை அதிகாரிகள், ஹரிஜன சேவா சங்கத்தினா், சா்வோதய அமைப்பினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதைத் தொடா்ந்து மாணவா்களுக்கு காந்தியின் சுயசரிதைப் புத்தகத்தையும், இனிப்புகளையும் ஆளுநா் வழங்கினாா்.

தலைவா்கள் புகழஞ்சலி:

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்), எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக), டிடிவி தினகரன் (அமமுக), கமல்ஹாசன் (மநீம) ஆகியோா் புகழஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com