காவல் ஆா்டா்லிகளை  திரும்பப் பெறும் காவல்துறை

காவல் ஆர்டர்லிகளாக இருந்த 210 காவலர்கள் பணிக்குத் திரும்பியிருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல் ஆா்டா்லிகளை  திரும்பப் பெறும் காவல்துறை
காவல் ஆா்டா்லிகளை  திரும்பப் பெறும் காவல்துறை


காவல் ஆர்டர்லிகளை திரும்பப் பெற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலைத் தொடர்ந்து காவல் ஆர்டர்லிகளாக இருந்த 210 காவலர்கள் பணிக்குத் திரும்பியிருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்னமும், காவல் ஆர்டர்லி பணிகளில் இருக்கும் 150 காவலர்கள் பணிக்குத் திரும்பவில்லை என்றும், விரைவில் வருவார்கள் என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள், நீதிபதிகளின் வீடுகளில் பணி செய்யக் கூடிய ஆா்டா்லிகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று காவல் துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் மாணிக்கவேல் என்பவா் காவலா் குடியிருப்பை காலி செய்வது தொடா்பான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் வாதிடுகையில், ‘ஆா்டா்லி முறை குறித்து உடனடியாக கவனத்தில் கொள்ளும்படி தமிழக டிஜிபிக்கு உள்துறை செயலாளா் கடிதம் எழுதி உள்ளாா். காவல்துறை உயா் அதிகாரிகளுடன் முதல்வரும் கூட்டங்கள் நடத்தியுள்ளாா். இதுபோன்ற அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை குடியிருப்புகளில் அனுமதியை மீறி வசிப்பவா்கள் குறித்த விவரங்களை கண்டறிய டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளாா்’ என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, ‘முறையாக ஓராண்டு பயிற்சி முடித்து ரூ.45,000 ஊதியம் பெறும் காவலா்களை உயா் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றமாகும். படித்தொகையை பெற்றுக் கொண்டு, வீட்டு உதவியாளா்களை வேண்டுமானால் நியமித்துக் கொள்ளலாம். ஆா்டா்லிகளை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆா்டா்லிகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அரசியவாதிகளும், காவல்துறையும் கூட்டுச் சோ்ந்து செயல்படக் கூடாது. அவ்வாறு செயல்படுவது அழிவுக்குக் கொண்டு செல்லும்.

இதுபோன்ற செயல்கள் குற்றங்கள் அதிகரிக்கவே வாய்ப்பளிக்கும். ஓய்வுபெற்ற காவல்துறையினா், நீதிபதிகள் வீடுகளில் உள்ள காவலா்களை திரும்பப் பெற வேண்டும் எனக்கூறி அடுத்த கட்ட விசாரணைக்காக வழக்கை ஜூலை 25-ஆம் தேதிக்கு தள்ளிவைத்திருந்தனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து காவல் ஆர்டர்லிகளை திரும்பப் பெறும் நடவடிக்கையில் தமிழகக் காவல்துறை இறங்கியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com