மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.173 கோடி சொத்துகள் முடக்கம்!

லாட்டரி விற்பனையாளர் மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.173 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை. 
லாட்டரி விற்பனையாளர் மார்ட்டின்
லாட்டரி விற்பனையாளர் மார்ட்டின்

லாட்டரி விற்பனையாளர் மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.173 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை. 

கோவையைச் சேர்ந்த பிரபல லாட்டரி விற்பனையாளர் சான்சியாகோ மார்ட்டின். லாட்டரி விற்பனை மூலம் கொடிகட்டிப் பறந்தவர். இவருக்கு தமிழ்நாடு முழுவதும் ஏராளமான சொத்துகள் உள்ளன. 

தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் அசாம், மேற்குவங்கம், சிக்கிம் என நாட்டின் பல மாநிலங்களிலும் இவரது லாட்டரி விற்பனை தொழில் நடைபெற்று வருகிறது.

கடந்த 2009-2010 ஆம் ஆண்டுகளில் லாட்டரி விற்பனை மூலம் கிடைத்த ரு.910.3 கோடி வருவாயை மறைத்து அதை 40க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்ததாக இவர் மீது சிபிஐ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

மேலும், முறையாக லாட்டரி விற்பனை நடந்து வரும் சிக்கிம் மற்றும் கேரளம் மாநிலங்களிலும் போலியான கணக்குகள் மூலம் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியுள்ளதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. 

இதுதொடர்பான வழக்கு சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், அமலாக்கத்துறையின் மார்ட்டினுக்கு சொந்தமான சொத்துகளை அவ்வப்போது முடக்கி வந்தனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ரூ.119.6 கோடி சொத்துகளை முடக்கினர். பின்னர், ரூ.136 கோடி சொத்துகளை முடக்கினர்.  

இந்நிலையில், பண மோசடி குற்றச்சாட்டில் மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.173 கோடி மதிப்புள்ள  அசையும், அசையா சொத்துகளை சனிக்கிழமை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை. 

அவரது சொத்துகள் சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  

லாட்டரி விற்பனையாளர் மார்ட்டின் மில், மால்கள், திரையரங்குகள் என பல தொழில்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com