திருவாரூர் திமுகவின் கோட்டை: எம்.எல்.ஏ. பூண்டி கே.கலைவாணன் பேச்சு

திருவாரூர் மாவட்டம் எப்போதும் திமுகவின் கோட்டைதான் என, மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே.கலைவாணன் தெரிவித்தார்.
திருவாரூர் திமுகவின் கோட்டை:  எம்.எல்.ஏ. பூண்டி கே.கலைவாணன் பேச்சு

கூத்தாநல்லூர்:  திருவாரூர் மாவட்டம் எப்போதும் திமுகவின் கோட்டைதான் என, மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே.கலைவாணன் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 99 ஆவது பிறந்த நாள் விழா, நகராட்சித் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு மற்றும் திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் நகர திமுக சார்பில், வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது.

கூட்டத்திற்கு, மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பூண்டி கே.கலைவாணன் தலைமை வகித்தார்.

ஒன்றியச் செயலாளர்கள் கொரடாச்சேரி தெற்கு ஆர்.பாலச்சந்திரன், மேற்கு ஆர்.கலியபெருமாள், திருவாரூர் புலிவலம் ஏ. தேவா, மன்னை கிழக்கு அய்.வி.குமரேசன், நகர மன்றத் தலைவர் மு.பாத்திமா பஷீரா, திருவாரூர் நகரச் செயலாளர் எஸ்.பிரகாஷ், கொரடாச்சேரி பேரூர் செயலாளர் பூண்டி கே.கலைவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகரச் செயலாளர் எஸ்.வி. பக்கிரிசாமி வரவேற்றார். கூட்டத்தில், சட்டப் பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் பேசியதாவது,

தமிழகத்தை கடந்த 10 ஆண்டு காலமாக ஆட்சி செய்த அதிமுக ஆட்சியில், தமிழகம் பாலைவனமாக காட்சியளித்தது. அதேபோல், மத்தியில் ஆளக்கூடிய பாஜக அரசு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதிகளை வழங்காமல், பல்வேறு திட்டங்களை முடக்கி வருகிறது.

வரலாற்றிலேயே காவிரி தண்ணீரை, முன்னதாகவே திறக்கச் செய்தவர் முதல்வர் ஸ்டாலின். விவசாயிகளின் பாதுகாவலர் முதல்வர் ஸ்டாலின். பதவியேற்ற போது சொன்னதை தற்போது செய்து வருபவர் முதல்வர் ஸ்டாலின்.

தமிழகத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுபவர் முதல்வர் ஸ்டாலின். எப்போதுமே, திருவாரூர் மாவட்டம் திமுகவின் கோட்டைதான். தமிழக மக்கள் எந்த நேரத்திலும் திமுகவிற்குத்தான் துணை நிற்பார்கள் என்றார்.

கூட்டத்தில், தலைமை கழகப் பேச்சாளர்கள் சைதை சாதிக், ஆரூர் ஜோதி ஆகியோர் திமுகவின் சாதனைகளை விளக்கிப் பேசினர். கூட்டத்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஆர்.புரோஜுதீன், வி.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் பி.பக்கிரி செல்வம், மாவட்டப் பிரதிநிதிகள் டீ. செல்வம், கே.ரவிச்சந்திரன், ஏ.ஏ.அமீர்தீன், நகர அவைத் தலைவர் யு.முத்து, நகரப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாஜா நஜ்முதீன், நகர துணைச் செயலாளர்கள் டீ.கே.தேவா, எஸ்.எம்.கே.யாஸ்மின் பர்வீன், ஜி.சேகர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிறைவாக, மாவட்ட பிரதிநிதி எம்.ரஹ்மத்துல்லா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com